/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மணிக்கூண்டை சுற்றி கட்டிய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் மணிக்கூண்டை சுற்றி கட்டிய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மணிக்கூண்டை சுற்றி கட்டிய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மணிக்கூண்டை சுற்றி கட்டிய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மணிக்கூண்டை சுற்றி கட்டிய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : மே 11, 2025 12:28 AM

திருவான்மியூர், அடையாறு மண்டலம், 180வது வார்டு, திருவான்மியூர், வடக்குமாட வீதியில் 1961ல் மணிக்கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. திருவான்மியூரின் அடையாளமாக இது விளங்கியது.
காலப்போக்கில், பராமரிப்பு இல்லாததால், மணிக்கூண்டு இடத்தைச் சுற்றி கடைகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டன. இதனால், மணிக்கூண்டு இருந்த இடம் தெரியாமல் ஆனது.
இடத்தை புதுப்பித்து, புதிய மணிக்கூண்டு அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மணிக்கூண்டை சுற்றி கட்டிய கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர்.
மாநகராட்சி நிதியில், புதிய மணிக்கூண்டு அமைத்து, திருவான்மியூரின் அடையாளத்தை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.