/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விபத்தில் உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு நிவாரணம் விபத்தில் உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு நிவாரணம்
விபத்தில் உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு நிவாரணம்
விபத்தில் உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு நிவாரணம்
விபத்தில் உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு நிவாரணம்
ADDED : மே 20, 2025 01:37 AM
மணலிபுதுநகர், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தனர் ரவி செல்வம், 47. இவர், மணலிபுதுநகர், சி.ஏ., லாஜிஸ்டிக் எனும் நிறுவனத்தில், லாரி ஓட்டுனராக பணிபுரிந்தார். கடந்த 14ம் தேதி, ஆந்திராவில் இருந்து, 'மேங்கோ ஜூஸ்' ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்துார் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி விபத்துக்குள்ளானது. இதில், ரவி செல்வத்திற்கு காயம் ஏற்பட்டது. உடன் சென்ற மற்றொரு ஓட்டுனர் உதவியுடன், சென்னை, மணலிபுதுநகருக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், 15ம் தேதி காலை உயிரிழந்தார்.
இது குறித்து நிறுவனம் உரிய தகவல் தரவில்லை எனக்கூறி, ரவி செல்வத்தின் மனைவி ராஜேஸ்வரி மற்றும் உடன் பணியாற்றிய ஓட்டுனர்கள், தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
பின், பேச்சு நடத்தப்பட்டு, நிறுவனம் சார்பில், 7.25 லட்சம் ரூபாய் நிவாரண தொகை, உயிரிழந்த ரவி செல்வத்தின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.