வந்தது எஸ்.எம்.எஸ்., போனது ரூ.44,000
வந்தது எஸ்.எம்.எஸ்., போனது ரூ.44,000
வந்தது எஸ்.எம்.எஸ்., போனது ரூ.44,000
ADDED : பிப் 23, 2024 11:58 PM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, டிமலர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ், 34. இவர், மவுன்ட் ரோடில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை செய்கிறார்.
கடந்த 22ம் தேதி அவரது மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. அதில் இருந்த 'லிங்க்'கில் சென்ற பின், தனக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை, மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில், 'அவரது வங்கி கணக்கில் இருந்து, 44,000 ரூபாய் எடுக்கப்பட்டது' என, குறுஞ்செய்தி வந்துள்ளது.
இது குறித்து, புளியந்தோப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.