/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 10 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத ' ரேஷன் ' கடை 10 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத ' ரேஷன் ' கடை
10 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத ' ரேஷன் ' கடை
10 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத ' ரேஷன் ' கடை
10 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத ' ரேஷன் ' கடை
ADDED : செப் 01, 2025 01:23 AM

கோவிலம்பாக்கம்:கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவிலம்பாக்கம், மேடவாக்கம் பிரதான சாலையில், நியாய விலை கடைக்கு புதிய கட்டடம் அமைக்கப்பட்டது.
ஆனால், கட்டி முடித்து பத்து ஆண்டுகளாகியும், இக்கடை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. அதனால், மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது.
ரேஷன் கடை பயன்பா ட்டிற்கு வராததால், கோவிலம்பாக்கத்தை சுற்றியுள்ள 1,000த்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள், 1 கி.மீ., தொலைவில், 'சுபிக் ஷா அவென்யூ'வில் இயங்கும் கடைக்கு சென்று, பொருட்களை வாங்கி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
எனவே, பயன்பாட்டிற்கு வராமலேயே பாழடைந்துள்ள ரேஷன் கடை கட்டடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.