/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரயில் நிலைய புனரமைப்பு: பிரதமர் நாளை அடிக்கல்ரயில் நிலைய புனரமைப்பு: பிரதமர் நாளை அடிக்கல்
ரயில் நிலைய புனரமைப்பு: பிரதமர் நாளை அடிக்கல்
ரயில் நிலைய புனரமைப்பு: பிரதமர் நாளை அடிக்கல்
ரயில் நிலைய புனரமைப்பு: பிரதமர் நாளை அடிக்கல்
ADDED : பிப் 24, 2024 11:58 PM

சென்னை, நாடு முழுதும் 554 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நாளை நடக்கிறது. பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார். இதில், தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 77 ரயில் நிலையங்கள், சர்வதேச தரத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோட்டத்தில், அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஏழு ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.சென்னையில் மாம்பலம், சென்னை கடற்கரை, பூங்கா, கிண்டி, பரங்கிமலை, அம்பத்துார் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அவற்றிற்கான மாதிரி படங்களை, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ளது.