/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துாண்டில் வளைவு கோரி கானத்துாரில் போராட்டம் துாண்டில் வளைவு கோரி கானத்துாரில் போராட்டம்
துாண்டில் வளைவு கோரி கானத்துாரில் போராட்டம்
துாண்டில் வளைவு கோரி கானத்துாரில் போராட்டம்
துாண்டில் வளைவு கோரி கானத்துாரில் போராட்டம்
ADDED : ஜூன் 13, 2025 09:27 PM
கானாத்துார்:சென்னை அடுத்த கானத்துார், ரெட்டிக்குப்பம் கடற்கரை பகுதியில் மீனவர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் காற்றின் வேகம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவர்களின் வீடுகள், வலை உலர வைக்கும் இடம், பொது கட்டடங்கள் சேதமடைந்து விட்டன.
இதையடுத்து துாண்டில் வளைவு அமைக்க மானியக்கோரிக்கையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 19 கோடி ரூபாய் செலவில், துாண்டில் வளைவு அமைக்க அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கியது. ஆனால், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில், துாண்டில் வளைவு திட்டப் பணிகளை துவக்கி, நிறைவேற்றித் தரக்கோரி கானத்துார் ரெட்டிக்குப்பம் மீனவர்கள் சார்பில், நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது.
இதில், 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை செங்கல்பட்டு வருவாய் கோட்டாச்சியர் மாலதி ஹெலன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார்.
அரசின் சார்பில் திட்டத்தை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும், பசுமைத் தீர்ப்பாயத்தில் விரைவில் வழக்கை முடித்து, துாண்டில் வளைவு அமைக்கப்படும் என, உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.