/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி பிரசிடென்சி கல்லுாரி முதலிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி பிரசிடென்சி கல்லுாரி முதலிடம்
மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி பிரசிடென்சி கல்லுாரி முதலிடம்
மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி பிரசிடென்சி கல்லுாரி முதலிடம்
மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி பிரசிடென்சி கல்லுாரி முதலிடம்
ADDED : செப் 11, 2025 04:32 AM
சென்னை :மாற்றுத்திறனாளிகளுக்கான முதல்வர் கோப்பை சிறப்பு கபடி போட்டியில், இரு பாலரிலும் பிரசிடென்சி கல்லுாரி அணிகள் முதலிடம் பிடித்தன.
மாவட்ட முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், நகரின் பல இடங்களில் நடக்கின்றன. அந்த வரிசையில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி, பெரிய மேடு, நேரு விளையாட்டு மைதானத்தில் நடக்கின்றன.
ஆண்களுக்கான சிறப்பு வாலிபால் போட்டியில், சென்னை பிக் பூஸ்டர் அணி முதலிடத்தையும், செயின்ட் லுாயிஸ் சிறப்பு பள்ளி இரண்டாமிடத்தையும் வென்றன.
பெண்களில் சென்னை அணி முதலிடத்தையும், ராணிமேரி கிளப் இரண்டாமிடத்தையும் கைப்பற்றின. 'வீல் சேர்' டேபிள் டென்னிஸில், ஆண்கள் தனிநபரில் ஜெகன் தோராப் மதன்; பெண்கள் தனிநபரில் ஜெனிபர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
இரட்டையரில், ஆண்களில் தினேஷ் பாபு - ஜெகன் தோராப் மதன், பெண்களில் ஜெனிபர் - அருண் மொழி ஜோடிகள் முதலிடம் பிடித்தனர்.
எறிபந்தில் இரு பாலரிலும், ஜி.ஓ.எஸ்., பால விஹார் சிறப்பு பள்ளி முதலிடத்தை கைப்பற்றின. கபடியில், இரு பாலரிலும் பிரசிடென்சி கல்லுாரி அணிகள் முதலிடத்தை கைப்பற்றின.