/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மணலியில் மின் மாற்றியால் பஸ் பயணியருக்க ஆபத்து மணலியில் மின் மாற்றியால் பஸ் பயணியருக்க ஆபத்து
மணலியில் மின் மாற்றியால் பஸ் பயணியருக்க ஆபத்து
மணலியில் மின் மாற்றியால் பஸ் பயணியருக்க ஆபத்து
மணலியில் மின் மாற்றியால் பஸ் பயணியருக்க ஆபத்து
ADDED : ஜூன் 24, 2025 12:13 AM

மணலி, மணலி, காமராஜர் சாலை - சாஸ்திரி நகர், சின்னசேக்காடு பேருந்து நிறுத்தத்தை, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் பயன்படுத்துகின்றனர்.
நிறுத்தத்தில் உள்ள பேருந்து பயணியர் நிழற்குடையை ஒட்டி அமைந்துள்ள தனியார் வணிக வளாகத்திற்கு, மின்சாரம் பகிர்வு செய்வதற்காக, ஒற்றை கம்பத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றி, நிழற்குடையை ஒட்டியே அமைக்கப்பட்டிருப்பதால், பயணியர் பீதியுடனே பேருந்திற்காக காத்திருக்கின்றனர்.
மழை நேரங்களில், அந்த மின் மாற்றியில் இருந்து தீப்பொறி கிளம்புவதால், நிழற்குடையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
தனியார் வணிக வளாகத்தின் தேவைக்காக, பயணியர் நிழற்குடையை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இல்லாவிடில், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ வாய்ப்புண்டு என, பலரும் எச்சரிக்கின்றனர்.