/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்
மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்
மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்
மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜன 11, 2024 01:27 AM

திருவொற்றியூர், சென்னை, எண்ணூர், நெட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் இப்பள்ளியில், பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இவ்வாண்டும்பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் லெஸ்லி தலைமையில், நேற்று காலை பொங்கல் விழா கொண்டாட்டம் களை கட்டியது.
தென்னை ஓலையால் வேயப்பட்ட குடில் முன், மாணவியர் பாரம்பரியமான முறையில் சேலை அணிந்தும், மாணவர்கள் வேட்டி அணிந்தும், மாதிரி பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
மாணவ, - மாணவியர் பங்கேற்ற ஒயிலாட்டம், கோலாட்டம், கிராமிய நடன போட்டி, பாட்டு போட்டிகள் நடந்தன. மாணவர்களின் பெற்றோர் பங்கேற்ற பிரம்மாண்ட வீதி நடனம் உள்ளிட்டவையும் நடந்தன. அதைத் தொடர்ந்து, உறியடித்தல் கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.