/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'மப்'பில் பணிக்கு வந்த போலீஸ்காரரிடம் விசாரணை 'மப்'பில் பணிக்கு வந்த போலீஸ்காரரிடம் விசாரணை
'மப்'பில் பணிக்கு வந்த போலீஸ்காரரிடம் விசாரணை
'மப்'பில் பணிக்கு வந்த போலீஸ்காரரிடம் விசாரணை
'மப்'பில் பணிக்கு வந்த போலீஸ்காரரிடம் விசாரணை
ADDED : செப் 14, 2025 03:02 AM
ராமாபுரம்,:ராமாபுரம் காவல் நிலையத்தில், போதையில் பணிக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ்காரரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ராமாபுரம் காவல் நிலைய போலீஸ்காரர் பிரபு. மது போதையில் பணிக்கு வருவதே இவரது வழக்கம்.
பணியில் இருக்கும் போது, புகார் கொடுக்க வருவோர், சக போலீசார் மற்றும் ஆய்வாளரை தரக்குறைவாக பேசுவதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம், மது போதையில் பணிக்கு வந்த பிரபு வழக்கம் போல், சக போலீசாரை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகின.
உயர் அதிகாரிகளிடம் சக போலீசாரும் புகார் அளித்ததால், பிரபுவிடம் விசாரணை நடந்து வருகிறது. விரைவில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.