/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காவலர் தின விழாவில் போலீசார் உறுதிமொழி ஏற்பு காவலர் தின விழாவில் போலீசார் உறுதிமொழி ஏற்பு
காவலர் தின விழாவில் போலீசார் உறுதிமொழி ஏற்பு
காவலர் தின விழாவில் போலீசார் உறுதிமொழி ஏற்பு
காவலர் தின விழாவில் போலீசார் உறுதிமொழி ஏற்பு
ADDED : செப் 11, 2025 02:25 AM

சென்னை :முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நேற்று நடந்த காவலர் தின விழாவில், ஆயிரக்கணக்கான போலீசார் உறுதிமொழி ஏற்றனர்.
கடந்த 1859ல் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், செப்., 6ல், மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அமைப்பு ரீதியாக காவல்துறை உருவாக்கப்பட்டது.
இதையொட்டி, ஆண்டுதோறும் செப்., 6, காவலர் தினமாக கொண்டாடப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், போலீஸ் அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான காவலர்களும், காவலர் தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
விழாவில், தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் பேசியதாவது:
அன்னையர் தினம், உழைப்பாளர் தினம், ஆசிரியர்கள் தினம், மருத்துவர்கள் தினம் எல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இருப்பினும், ஆண்டு முழுதும் அயராது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கென ஒரு தினம் இல்லாமல் இருந்தது.
இதை அறிந்த முதல்வர், செப்., 6ம் தேதி காவலர் தினமாக அறிவித்தது, வரலாற்று சிறப்புமிக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பேசுகையில், ''குற்றங்களே நடக்காத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற முதல்வரின் நோக்கத்திற்கு, தமிழக காவல்துறை என்றும் உறுதுணையாக நிற்கும்,'' என்றார்.