/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 3 வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோவிலம்பாக்கத்தில் 2வது சம்பவம் 3 வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோவிலம்பாக்கத்தில் 2வது சம்பவம்
3 வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோவிலம்பாக்கத்தில் 2வது சம்பவம்
3 வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோவிலம்பாக்கத்தில் 2வது சம்பவம்
3 வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோவிலம்பாக்கத்தில் 2வது சம்பவம்
ADDED : ஜூன் 10, 2025 12:29 AM
கோவிலம்பாக்கம், கோவிலம்பாக்கம், காந்தி நகரைச் சேர்ந்தவர் வினோத், 32. இவரது, வீட்டு வாசலில் நேற்று இரவு 10:00 மணியளவில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர்கள், பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றனர். இதில், வீட்டின் வெளியில் நின்றிருந்த வினோத்தின் மகன் பிரதீப்பிற்கு, 12, லேசான காயம் ஏற்பட்டது.
இதேபோல் கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆர்., நகர், 7வது தெருவைச் சேர்ந்த நித்தியானந்தன் மற்றும் பெரியார் நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரது வீட்டிலும். பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
மூன்று வாலிபர்களின் வீடுகளை குறிவைத்து, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவங்கள் குறித்து மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஒரு வாரத்திற்கு முன் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பழிவாங்கும் நிகழ்வாக, நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா; மூன்று வீட்டின் மீதும் ஒரே கும்பல் தான் பெட்ரோல் குண்டு வீசினார்களா உள்ளிட்ட, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.