Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பார்வையாளர்களை கவர்ந்த செல்லப்பிராணிகள் விழா

பார்வையாளர்களை கவர்ந்த செல்லப்பிராணிகள் விழா

பார்வையாளர்களை கவர்ந்த செல்லப்பிராணிகள் விழா

பார்வையாளர்களை கவர்ந்த செல்லப்பிராணிகள் விழா

ADDED : செப் 15, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
மதுரவாயல்; மதுரவாயலில் செல்ல பிராணிகளுக்கு எடுக்கப்பட்ட விழா, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஸ்டர்லேண்ட் பெட்ஸ் அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப் மெட்ராஸ் கன்னிமாரா இணைந்து, மதுரவாயல் எஸ்.பி.பி., கார்டனில் நேற்று செல்லப் பிராணிகளுக்கு விழா எடுத்தன.

விழாவில், சென்னை 'ஸ்மார்ட் டாக் டிரைனர்ஸ்' நிறுவன பயிற்சியாளர் இளையராஜா தங்கசாமி, உரிமையாளர்களின் கட்டளைக்கு இணங்க, நாய் செயல்படுவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.

தொட ர்ந்து, செல்ல பிராணிகளுக்கு 'ராம்ப் வாக், லெமன் ஸ்பூன்' போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், பூடில், யார் க் ஷ யர் டெரியர், அலாஸ்கன், பீகல், ஷிஹ் சூ, ஜெர்மன் ஹஸ்கி, கோல்டன் ரெட்ரீவர் உள்ளிட்ட 11 வகையில், 50க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இவைகளின் செயல்பாடுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

மேலும், விழா நடந்த வளாகத்தில், செல்லப் பிராணி களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து நடிகையும் நல செயற்பாட்டாளருமான சந்தியா ஜகர்லமுடி பேசுகையில், ''நம் நாட்டில் தற்போது, தெரு நாய் பிரச்னை பற்றி எரிந்து வருகிறது.

நாய்க்கு உணவு வைப்பவர்களையும் தற்போது, மிரட்ட துவங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு தெரு நாயை தத்தெடுத்து வளர்த்தால், இப்பிரச்னைக்கு பெரிய மாற்றம் வரும்,'' என்றார்.

ட்விஸ்டி டெயில்ஸ்- செல்லப்பிராணி தீம் உணவகம் நிறுவனர் ரேகா பேசுகையில், ''நான் 'மல்டிபிள் ஸ்களீரோசிஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டு 17 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டேன். மீண்டு வர முடியாது என, மருத்துவர் தெரிவித்தார்.

அப்போது ஒரு நாய்க்குட்டியை வளர்த்தேன். அதனுடன் பழகியதில் இருந்து எனது வாழ்க்கை மாறியது,'' என்றார்.

ஈஸ்ட் கோஸ்ட் பெட் மருத்துவமனை தலைமை கால்நடை மருத்துவர் பேராசிரியர் சந்திரசேகர் பேசுகையில், ''செல்ல பிராணிகளுடன் பழகும் குழந்தைகள் 'ஐக்யூ லெவல்' அதிகரிக்கிறது. செல்ல பிராணிகள் வைத்திருந்தால் நேர்மறை உருவாகும், ரத்த அழுத்தம் குறையும், இதய நோய் பாதிப்பு வருவது குறைகிறது,'' என்றார்.

நி கழ்ச்சியில், பெரோ டெக்னோகேர் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி சாய்பிரசாத் பந்தில்வார், ஸ்டர்லேண்ட் பெட்ஸ் அமைப்பு நிறுவனர் சுதர்ஷன் உள்ளிட்டோரும், செல்லப் பிராணிகள் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us