/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாரிய குடியிருப்பில் 'டவர்' அமைக்க அனுமதி வாரிய குடியிருப்பில் 'டவர்' அமைக்க அனுமதி
வாரிய குடியிருப்பில் 'டவர்' அமைக்க அனுமதி
வாரிய குடியிருப்பில் 'டவர்' அமைக்க அனுமதி
வாரிய குடியிருப்பில் 'டவர்' அமைக்க அனுமதி
ADDED : செப் 15, 2025 01:01 AM

சென்னை; பெரும்பாக்கம் வாரிய குடியிருப்பில், மொபைல் போன் டவர் அமைக்க இடம் ஒதுக்கியதால், பல ஆண்டுகளாக நீடித்த சிக்னல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க உள்ளது.
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், மொபைல் போன் சிக்னல் கிடைப்பதில், பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், ஆன்லைன் வழியாக நடைபெறும் போட்டி தேர்வுக்கான வகுப்புகள், இதர திறன் சார்ந்த பயிற்சிகளில் பங்கேற்க முடியாமல், மாணவ - மாணவியர் திணறுகின்றனர்.
தனியார் தொலைத்தொடர்பு துறையினர், மூன்று இடங்களில் டவர் அமைக்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடிகளில் டவர் அமைக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால், தரை பகுதியை வாடகை அடிப்படையில் வழங்க வாரியம் முன்வந்தது.
முதற்கட்டமாக, ஜியோ நிறுவனத்திற்கு, 1,200 சதுர அடி இடம், ஆண்டு வாடகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே டவரில், இதர தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சிக்னல் கருவி அமைக்க உள்ளன என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.