Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அடிப்படை வசதி இல்லாத பெரியார் நகர் மயான பூமி  பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம்

அடிப்படை வசதி இல்லாத பெரியார் நகர் மயான பூமி  பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம்

அடிப்படை வசதி இல்லாத பெரியார் நகர் மயான பூமி  பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம்

அடிப்படை வசதி இல்லாத பெரியார் நகர் மயான பூமி  பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம்

ADDED : மார் 18, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
திருநின்றவூர், திருநின்றவூர் நகராட்சி, பெரியார் நகரை பொறுத்தவரை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வருகயைால், நாளுக்கு நாள் கட்டடங்கள் மற்றும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

இங்குள்ள மயான பூமி மூன்றாக பிரிக்கப்பட்டு ஹிந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

முஸ்லிம் மயான பூமி, சுற்றுச்சுவர் கட்டப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஹிந்து மற்றும் கிறிஸ்தவர்கள் மயான பூமி பராமரிப்பின்றி, கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து காட்சியளிக்கிறது. கடந்த 2014ல் மயான பூமியை ஒட்டி, இறுதிச் சடங்கு செய்வதற்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு சுற்றுச்சுவர் இல்லாததால், கொரோனா காலத்தில் மர்ம நபரால், ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார் குழாய்களுடன் திருடப்பட்டது.

சாலை, தண்ணீர், மின்விளக்கு என எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், இறுதிச்சடங்கு செய்ய வருவோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்

இறுதிச்சடங்கிற்கு தேவையான குடிநீர், ஆர்.வி.நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் குழாயில் பிடித்து, பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பகுதிவாசிகளுக்கும், இறுதி சடங்கு செய்ய வருவோருக்கு, அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.

அதேபோல், சுற்றுச்சுவர் இல்லாமல் புதர்மண்டி காட்சியளிப்பதால், ஒவ்வொரு முறையும் 'பொக்லைன்' இயந்திரம் கொண்டு இடத்தை துாய்மைப்படுத்தி, இறுதி சடங்கு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எரிமேடை அமைந்துள்ள பகுதியில் மின் விளக்கு இல்லாமல் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.

மேற்கூறிய காரணங்களால், இறுதி சடங்கு செய்வதற்கு 25,000 ரூபாய் வரை செலவாகிறது. மின்னணு மயானமும் 2 கி.மீ., துாரத்தில், திருநின்றவூர், கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளதால், பெரியார் நகர் பகுதிவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள், பெரியார் நகர் மயான பூமியில் அடிப்படை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

மழைக்காலத்தில்

கடும் அவஸ்தை

பெரியார் நகர் சுடுகாட்டில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக சாலை வசதி இல்லாததால், மழைக்காலத்தில் உடல்களை எடுத்து சென்று, இறுதி சடங்கு செய்வதற்கு சிரமமாக உள்ளது. திருநின்றவூர் நகராட்சியில் ஏழு சுடுகாடு இருந்தாலும், பெரியார் நகர் சுடுகாடு படுமோசமாக காட்சியளிக்கிறது. போதிய பராமரிப்பு இல்லாததால், இறந்தவர்களின் பொருட்கள் எரிக்காமல், அப்பகுதியில் துாக்கி வீசப்படுகிறது. அவை காற்றில் பறந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

- பகுதிவாசிகள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us