ADDED : ஜன 23, 2024 12:35 AM

ஆவடி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் ஆறாவது பிளாக் செல்லும் வழியில், பகுதிவாசிகள் கண்டமேனிக்கு குப்பை கொட்டி வருகின்றனர்.
இதனால், வழிநெடுகே பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளாக காட்சிஅளிக்கிறது.
மேலும், கழிவுநீர் சேர்ந்து அந்த சாலை சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால், அப்பகுதியை கடந்து செல்வோர் முகம் சுளித்தபடி செல்கின்றனர். ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


