/உள்ளூர் செய்திகள்/சென்னை/போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த மது விருந்து கும்பல்போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த மது விருந்து கும்பல்
போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த மது விருந்து கும்பல்
போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த மது விருந்து கும்பல்
போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த மது விருந்து கும்பல்
ADDED : ஜன 07, 2024 12:27 AM
கொளத்துார், சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபாண்டி, 36. இவர், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 4ம் தேதி, இரவு ரோந்துப்பணியில் இருந்தார். 5ம் தேதி அதிகாலை துர்கா காலனி, ஜெயராம் நகர் சந்திப்பில், வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் கும்பல், சாலையில் மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதை முத்துபாண்டி கண்டித்துள்ளார். அங்கிருந்து கலைந்து செல்லவும் அறிவுறுத்தினார்.
ஆத்திரமடைந்த அந்த கும்பல், போலீஸ்காரர் முத்துபாண்டியிடம் தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து விசாரித்த போலீசார், கொளத்துாரைச் சேர்ந்த அபிஷேக், 28, என்பவரை கைது செய்தனர்.