/உள்ளூர் செய்திகள்/சென்னை/நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்தம் ஏற்பாடுநெரிசலை தவிர்க்க வாகன நிறுத்தம் ஏற்பாடு
நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்தம் ஏற்பாடு
நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்தம் ஏற்பாடு
நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்தம் ஏற்பாடு
ADDED : பிப் 24, 2024 12:01 AM
மெரினா, கலங்கரை விளக்கம் அருகில், மீன் வாங்க வருவோரின் வாகனங்களை நிறுத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மெரினா சர்வீஸ் சாலையில், ஏராளமான மீன் கடைகள் இருந்தன.
விடுமுறை நாட்களில் இங்கு, மீன் வாங்க அதிகமானோர் வருவர். இவர்களில் பெரும்பாலானோர் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால், சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத் தவிர்க்க, பட்டினப்பாக்கம் பகுதியில், 300க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்க, ஒரு அங்காடி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த அங்காடி முடியும் தறுவாயில் இருந்தும், இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அங்கு மீன் கடைகள் அமைத்தவர்கள், தற்போது வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர்.
இந்நிலையில், கலங்கரை விளக்கம் பின்புறத்தில், தற்காலிக மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மீன் வாங்க அதிகமானோர் வருகின்றனர்.
மத்திய சென்னை வி.ஐ.பி.,க்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருப்பதால், அதிகமானோர் கார் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில், 'வாகனம் நிறுத்தும் இடம்' என, மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக அங்கு பிரத்யேக பாதையும் அமைத்துள்ளனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்களை நிறுத்தி, மீன்கள் வாங்கிச் செல்கின்றனர்.