/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எண்ணுார் முகத்துவாரத்தில் எண்ணெய் படலத்தால் பீதி எண்ணுார் முகத்துவாரத்தில் எண்ணெய் படலத்தால் பீதி
எண்ணுார் முகத்துவாரத்தில் எண்ணெய் படலத்தால் பீதி
எண்ணுார் முகத்துவாரத்தில் எண்ணெய் படலத்தால் பீதி
எண்ணுார் முகத்துவாரத்தில் எண்ணெய் படலத்தால் பீதி
ADDED : ஜூன் 13, 2025 12:13 AM

எண்ணுார், பகிங்ஹாம் கால்வாயில் வெளியேறும் உபரிநீர், எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் வகையில் அமைப்பு உள்ளது.
கடந்த 2023ல் 'மிக்ஜாம்' புயலின்போது பெருக்கெடுத்த வெள்ளநீரில், பகிங்ஹாம் கால்வாய் வழியாக எண்ணெய் கழிவுகளும் கலந்து, குடியிருப்புகள் புகுந்ததால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அன்று துவங்கி, பகிங்ஹாம் கால்வாய் வழியாக, ரசாயனம் மற்றும் எண்ணெய் கழிவுகள், முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் சம்பவங்கள், அடிக்கடி அரங்கேறி வருகின்றன. அதன்படி, நேற்று மதியம், எண்ணுார் முகத்துவாரம், கழிமுக பரவல் முழுதும் எண்ணெய் படலம் படர்ந்து காட்சியளித்தது.
இப்பிரச்னை தொடர்வதால், சுற்றுச்சூழல் பாதித்து கடல் நீர் - நன்னீர் கலக்கும் முகத்துவார பகுதியில், இனப்பெருக்கம் செய்ய வரும் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழிவை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், மீனவர்கள், வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாசு கட்டுபாட்டு வாரியம் கவனித்து, பகிங்ஹாம் கால்வாய் வழியாக, கடலில் கலக்கும் ரசாயனம் - எண்ணெய் கழிவுகளுக்கு காரணமான நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், எண்ணுார் முகத்துவாரத்தில் மீன்வளம் அழிய கூடும் என, மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.