ADDED : ஜூன் 13, 2025 12:37 AM
தாம்பரம், மேற்கு தாம்பரம், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர், 52. இவர், நேற்று முன்தினம் இரவு, முடிச்சூர் - புறவழிச்சாலை சாலை சந்திப்பு அருகேயுள்ள, 'டாஸ்மாக்' கடையில் மது அருந்தினார்.
பின் அங்கிருந்து, தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பின்னால் தாம்பரத்தில் இருந்து முடிச்சூர் நோக்கி சென்ற ஸ்கூட்டி வாகனம் மோதியது. இதில், கீழே விழுந்த சேகரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து தொடர்பாக, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஸ்கூட்டி ஓட்டிவந்த வரதராஜபுரத்தைச் சேர்ந்த தருண், 25, என்பவரை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.