/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ஒருவரின் வளர்ச்சிக்கு புத்தகம், நண்பர்கள் தேவை' 'ஒருவரின் வளர்ச்சிக்கு புத்தகம், நண்பர்கள் தேவை'
'ஒருவரின் வளர்ச்சிக்கு புத்தகம், நண்பர்கள் தேவை'
'ஒருவரின் வளர்ச்சிக்கு புத்தகம், நண்பர்கள் தேவை'
'ஒருவரின் வளர்ச்சிக்கு புத்தகம், நண்பர்கள் தேவை'
ADDED : மே 12, 2025 12:51 AM

திருவொற்றியூர்:திருவொற்றியூர் கிளை நுாலகம் வாசகர் வட்டத்தின் சார்பில், நேற்று முன்தினம் மாலை, சிந்தனை சாரல் 92வது மாதாந்திர நிகழ்ச்சியில், 'புரட்சி கவி பாரதிதாசன் பார்வையில்' என்ற தலைப்பில், தமிழாசிரியர், கவிஞர் நிலவரசன் பங்கேற்று பேசினார்.
விழாவில் அவர் பேசியதாவது:
'நீ திரும்பும் திசையில் சமுதாயம் திரும்ப வேண்டும். அதற்கு நீ அறிவாளியாக ஆற்றலாளனாக இருக்க வேண்டும்' என்பதை தான் பாரதிதாசன் இளைஞர்களுக்கு சொல்கிறார். ஒருவர் வளர்ச்சிக்கு நல்ல நண்பர்கள், புத்தகங்கள் தேவை. அந்த இரண்டும் இந்த நுாலகத்தில் உள்ளன. எனவே, படிப்பை தாண்டிய புத்தங்கள் அதிகம் படிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், வாசகர் வட்ட நிர்வாகிகள் குரு சுப்ரமணி, துரைராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.