/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம் துவக்கம் ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்
ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்
ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்
ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்
ADDED : ஜூன் 06, 2025 12:29 AM
சென்னை,சென்னையில் இயற்கை சீற்றத்தால் சாலையோர மரங்கள் மட்டுமின்றி, பூங்காக்களில் அமைக்கப்பட்டிருந்த மரங்களும், வேருடன் சாய்ந்தன.
அதனால், இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, சென்னை மாநகராட்சி பகுதிகளில், ஒரு லட்சம் நாட்டுரக மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
முதற்கட்டமாக, 12,175 மரக்கன்று நடவு செய்யும் திட்டத்தை, மேயர் பிரியா நேற்று துவக்கி வைத்தார். இதில், மணலி மண்டலத்தில், 10 அடி உயரம் உடைய 250 மகிழம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும், ஆலமரம், பூவரசம், செண்பகம், சிவப்பு சாண்டர், வில்வம், நீர் மருது உள்ளிட்ட மரக்கன்றுகள், மாநகராட்சியின் திறந்தவெளி நிலங்கள், பூங்காக்கள், சாலையோர குளம், ஏரிக்கரை போன்ற இடங்களில் நடவு செய்யப்பட உள்ளன.