/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அதிகாரிகள் பணியிடம் காலி குடிநீர் விநியோகத்தில் சிக்கல் அதிகாரிகள் பணியிடம் காலி குடிநீர் விநியோகத்தில் சிக்கல்
அதிகாரிகள் பணியிடம் காலி குடிநீர் விநியோகத்தில் சிக்கல்
அதிகாரிகள் பணியிடம் காலி குடிநீர் விநியோகத்தில் சிக்கல்
அதிகாரிகள் பணியிடம் காலி குடிநீர் விநியோகத்தில் சிக்கல்
ADDED : ஜூன் 15, 2025 08:20 PM
திருவொற்றியூர்:திருவொற்றியூர் மண்டலத்தின் 14 வார்டுகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குழாய், லாரிகள் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில், தினம் 14 எம்.எல்.டி., குடிநீர் வழங்க வேண்டிய நிலையில், 7 - 8 எம்.எல். டி., அளவிற்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், புழல் ஏரியில் இருந்து குடிநீர் சுத்திகரித்து செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, பல இடங்களில் குடிநீர் கலங்கலாக வருவதாக அவ்வப்போது புகார் எழுகிறது. தவிர, அழுத்தம் குறைவு காரணமாக, ராமநாதபுரம், சண்முகபுரம், பூம்புகார் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
திருவொற்றியூர் மேற்கில், சட்ட விரோதமான குடிநீர் இணைப்புகள், குடிநீரை உறிஞ்சும் மின் மோட்டர்கள் என, பல பிரச்னைகள் உள்ளன.
இந்நிலையில், குடிநீர் பிரச்னைகளை சமாளிக்கும் பொருட்டு, வார்டு ஒன்றிற்கு ஒரு உதவி பொறியாளர் வீதம், 14 உதவி பொறியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். தற்போது, மூன்று உதவி பொறியாளர்கள், இரண்டு உதவி செயற்பொறியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
தவிர பகுதி பொறியாளர் பணியிடமும், மே 31 ம் தேதியுடன் காலியானது. அந்த பணியையும் உதவி செயற்பொறியாளர் ஒருவர் கூடுதலாக கவனித்து வருகிறார். அதனால், குடிநீர் தட்டுப்பாடு, புதிதாக இணைப்பு வழங்குவது உள்ளிட்டவற்றை கவனிக்க ஆட்கள் இல்லாமல் பிரச்னை ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கவனித்து, தேவைக்கு ஏற்ப அதிகாரிகளை நியமித்து, குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.