/உள்ளூர் செய்திகள்/சென்னை/'ஓசி' சிகரெட் கேட்டு மிரட்டியோருக்கு வலை'ஓசி' சிகரெட் கேட்டு மிரட்டியோருக்கு வலை
'ஓசி' சிகரெட் கேட்டு மிரட்டியோருக்கு வலை
'ஓசி' சிகரெட் கேட்டு மிரட்டியோருக்கு வலை
'ஓசி' சிகரெட் கேட்டு மிரட்டியோருக்கு வலை
ADDED : ஜன 05, 2024 12:52 AM
கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 45. இவர், அதே பகுதியில் உள்ள நியூ ஆவடி சாலையில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை, இவரது கடைக்கு வந்த மூவர், சில ரவுடிகளின் பெயர்களைக் கூறி, 'ஓசி'யில் சிகரெட் கேட்டு மிரட்டி உள்ளனர்.
ரமேஷ் மற்றும் கடையின் ஊழியர்கள் தர மறுத்துள்ளனர். இதனால், அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு, கட்டைகளை கையில் வைத்துக் கொண்டு மிரட்டினர். இச்சம்பவம், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த 'வீடியோ' நேற்று மதியம், இணையதளத்தில் பரவியது. சம்பவம் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார், ரமேஷை அழைத்து விசாரித்து புகாரை பெற்று, மிரட்டிய மூவரையும் தேடி வருகின்றனர்.