Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செங்கல்பட்டில் 62 கிராமங்களை உள்ளடக்கி... புதிய துணை நகரம்

செங்கல்பட்டில் 62 கிராமங்களை உள்ளடக்கி... புதிய துணை நகரம்

செங்கல்பட்டில் 62 கிராமங்களை உள்ளடக்கி... புதிய துணை நகரம்

செங்கல்பட்டில் 62 கிராமங்களை உள்ளடக்கி... புதிய துணை நகரம்

ADDED : மே 25, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
சென்னை செங்கல்பட்டில், 181.11 சதுர கி.மீ., பரப்பளவுக்கு புதிய துணை நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை சி.எம்.டி.ஏ., முடுக்கி விட்டுள்ளது.

சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டத்தில், ஐந்து இடங்களில் புதிய துணை நகரங்களை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. இதனால் நகரின் மையப்பகுதியில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமழிசை, திருவள்ளூர், மீஞ்சூர் ஆகிய இடங்களில், புதிய நகரங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் ஒவ்வொரு துணை நகரத்தின் பரப்பளவு, அதில் சேர்க்க வேண்டிய பகுதிகள், எல்லைகள் இறுதி செய்யும் பணிகள் முடிக்கப்பட்டன.

இதையடுத்து, புதிய நகரங்களை ஏற்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து தனித்தனி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதில், புதிய நகரங்களில் திட்டமிட்ட நகர்ப்புற வளர்ச்சியை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் உருவாக்கினர்.

இதன்படி, ஒவ்வொரு புதிய துணை நகரத்துக்கும் தனித்தனியாக கலந்தாலோசகர் தேர்வு செய்யும் பணிகளில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமல்லாது, ஒவ்வொரு நகரத்துக்கும் விரிவான வளர்ச்சி திட்டம் தயாரிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வரிசையில் செங்கல்பட்டு புதிய துணை நகரத்தை, 136.25 சதுர கி.மீ., பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் பாலாறு முதல் சிங்கபெருமாள் கோவில் வரையிலான, 60 கிராமங்கள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கள நிலையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், இந்த பரப்பளவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 181.11 சதுர கி.மீ.,யாக இதன் பரப்பளவு விரிவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சேர்க்கப்பட்ட 60 கிராமங்களுடன், கூடுதலாக இரண்டு கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் புதிய நகருக்கான வழிமுறைகளை வகுக்க, கலந்தாலோசகர் தேர்வு பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.

குறிப்பாக, குடியிருப்பு, வணிக, தொழில் சார்ந்த திட்டங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளன.

இதற்கு தேவையான புதிய சாலைகள், போக்குவரத்து வசதிகள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புரிதல் தேவை

இது குறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சதானந்த் கூறியதாவது:

செங்கல்பட்டு போன்ற பகுதிகளில், அடிப்படை வசதிகள் தொடர்பான தேவைகள் இப்போதே அதிகமாக உள்ளன. இத்தேவைகளை பூர்த்தி செய்வதில், சரியான புரிதலுடன் செயல்பட வேண்டும்.

முழுமை திட்டம் தயாரிப்பு, விரிவான வளர்ச்சி திட்டம் தயாரிப்பு என, ஒவ்வொரு கட்டத்திலும் முறையாக செயல்பட வேண்டும். அத்துடன் இதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான விழிப்புணர்வுடன், இதற்கான திட்டங்களை செயல்படுத்தினால், மக்களுக்கு உரிய பலன் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய துணை நகரின்

அடிப்படை விபரங்கள்-181.11 சதுர கி.மீபுதிய நகரின்மொத்த பரப்பளவு--40.25 சதுர கி.மீ.,வனப்பகுதி--28.40 சதுர கி.மீ.,நீர்நிலைகள்--62மொத்த கிராமங்கள்--* செங்கல்பட்டு தாலுகா, 45; திருக்கழுக்குன்றம் தாலுகா, 13; திருப்போரூர் தாலுகா, 4 கிராமங்கள். * மக்கள் அடர்த்தி: சதுர கி.மீ.,க்கு, 3,900 பேர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us