Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நியூ பிரின்ஸ் பள்ளிகள் 10, பிளஸ் 2வில் 'சென்டம்'

நியூ பிரின்ஸ் பள்ளிகள் 10, பிளஸ் 2வில் 'சென்டம்'

நியூ பிரின்ஸ் பள்ளிகள் 10, பிளஸ் 2வில் 'சென்டம்'

நியூ பிரின்ஸ் பள்ளிகள் 10, பிளஸ் 2வில் 'சென்டம்'

ADDED : மே 18, 2025 04:14 AM


Google News
சென்னை:சென்னை உள்ளகரம் நியூ பிரின்ஸ் சீனியர் செகண்டரி பள்ளியில், 2024 - 25ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வெழுதிய 76 மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

அவர்களில், ஜிசேஷ்குமார் 481; அஸ்வத் 475; சூரஜ் 474 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வெழுதிய 49 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் தனுஷ், கணினி அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணுடன் மொத்தம் 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கவின் 465; முகுந்த் 461 மதிப்பெண்களுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

ஆதம்பாக்கத்தில் உள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வெழுதிய 76 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில் நிகிதா 488; ஸ்ரேயாகுமாரி, கணிதத்தில் 100 மதிப்பெண்ணுடன் 485; சோம்நாத் சக்திவேல் 485; கதிர்ஹான் 483 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வெழுதிய 55 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்பத்தில் 100 மதிப்பெண்ணுடன் ஜானவி 484; ஹர்ஷிதா 468; கிரிஷ் 467 மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை, நியூ பிரின்ஸ் கல்வி குழும தலைவர் லோகநாதன், செயலர் மற்றும் ஆதம்பாக்கம் பள்ளி முதல்வர் வி.எஸ்.மகாலட்சுமி, உள்ளகரம் பள்ளி முதல்வர் வீணா இளங்கோ உள்ளிட்டோர் வாழ்த்தினர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us