/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஏர்போர்ட்டிற்கு புது இயக்குநர் நியமனம் ஏர்போர்ட்டிற்கு புது இயக்குநர் நியமனம்
ஏர்போர்ட்டிற்கு புது இயக்குநர் நியமனம்
ஏர்போர்ட்டிற்கு புது இயக்குநர் நியமனம்
ஏர்போர்ட்டிற்கு புது இயக்குநர் நியமனம்
ADDED : செப் 06, 2025 12:25 AM
சென்னை : சென்னை விமான நிலையத்தின் புதிய இயக்குநராக, ராஜா கிஷோர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை விமான நிலைய இயக்குநரான சி.வி.தீபக், கடந்த 2023 ஜூன் மாதத்தில் இருந்து பணியாற்றி வருகிறார். தற்போது டில்லிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து, வடகிழக்கு மாநில விமான நிலைய ஆணைய, மண்டல நிர்வாக இயக்குநராக பணியாற்றிய ராஜா கிஷோர், சென்னை விமான நிலையத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.
திருப்பதி விமான நிலையத்தில் திறம்பட செயலாற்றி உள்ளார்.