/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தேசிய கிக் பாக்சிங் போட்டி தமிழக சிறுவர்கள் 'சாம்பியன்' தேசிய கிக் பாக்சிங் போட்டி தமிழக சிறுவர்கள் 'சாம்பியன்'
தேசிய கிக் பாக்சிங் போட்டி தமிழக சிறுவர்கள் 'சாம்பியன்'
தேசிய கிக் பாக்சிங் போட்டி தமிழக சிறுவர்கள் 'சாம்பியன்'
தேசிய கிக் பாக்சிங் போட்டி தமிழக சிறுவர்கள் 'சாம்பியன்'
ADDED : செப் 01, 2025 11:32 PM
சென்னை:சென்னையில் நடந்த தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், சிறுவர்கள் பிரிவில், தமிழக அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது.
வாக்கோ இந்தியா கிக் பாக்சிங் ஆதரவில், தமிழக அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில், கடந்த 28ல் துவங்கி, நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.
இதில், ஏழு முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவிலும், 10 - 15 வயதுக்குட்பட்ட 'கேடட்' என்ற பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
'லோ மற்றும் லைட் கிக், பாயின்ட் பைட் உள்ளிட்ட பல்வேறு வகையான சண்டை பிரிவுகளில், இருபாலருக்கும் போட்டிகள் நடந்தன.
அனைத்து போட்டிகள் முடிவில், தமிழக அமெச்சூர் கிக் பாக்சிங் அணி, 21 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலம் என, மொத்தம் 49 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதை தொடர்ந்து, மஹாராஷ்டிரா, ஹரியானா, சத்தீஷ்கர், ஒடிஷா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் முறையே, அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றின.
அதேபோல், 'கேடட்' பிரிவில், மஹாராஷ்டிரா மாநிலம், 31 தங்கம், 27 வெள்ளி, 40 வெண்கலம் என, 98 பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதை தொடர்ந்து, 24 தங்கம், 27 வெள்ளி, 55 வெண்கலம் என, 106 பதக்கங்களுடன், தமிழகம் இரண்டாமிடத்தை கைப்பற்றியது. ஹரியானா, குஜராத், பஞ்சாப் மாநில அணிகள் அடுத்தடுத்த இடங்களை வென்றன.