ADDED : ஜன 11, 2024 01:48 AM

திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்துார், பெரம்பூர் பகுதிகளில் உள்ள தெரு பெயர் பலகைகள், பல இடங்களில் சேதமாகி உள்ளன.
பெரும்பாலான இடங்களில், கட்சி மற்றும் இறப்பு, பிறந்தநாள் 'போஸ்டர்' ஆக்கிரமித்திருக்கும் நிலையில், சிலவற்றில் பெயர்கள் காணாமல் போயுள்ளன. அதிலும் சிலவற்றில், மாநகராட்சி நிர்வாகத்தின் பழைய வார்டு உள்ளிட்ட குறிப்புகளே உள்ளன. இதனால் புதிதாக வருவோர், தெரு பெயர் தெரியாமல் திண்டாடுகின்றனர். முன் காலங்களில், வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் உள்ள விபரங்களை பார்த்து தெரு பெயர்களை அறிவர். ஆனால் தற்போது வணிக நிறுவன பெயர் பலகையிலும் தெரு பெயருக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற ஆதங்கம் உள்ளது.
இவ்விஷயத்தில் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து, பேர் சொல்லும் தெரு பெயர் பலகைகளை நிறுவ வேண்டும்.
- சங்கர், திரு.வி.க., நகர்.