/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாக்பூர், பஞ்சாப் ஆரஞ்சு வரத்து அதிகரிப்புநாக்பூர், பஞ்சாப் ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு
நாக்பூர், பஞ்சாப் ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு
நாக்பூர், பஞ்சாப் ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு
நாக்பூர், பஞ்சாப் ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு
ADDED : ஜன 31, 2024 12:10 AM

சென்னை, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆரஞ்சு பழங்கள் அதிகளவில் விளைகின்றன. இவை 'கமலா ஆரஞ்சு' என்று அழைக்கப்படுகிறது.
தமிழகத்தின் மலை பிரதேசங்களிலும், இப்பழம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 'கிண்ணு ஆரஞ்சு' பழங்கள் அதிகளவில் விளைகின்றன. இவற்றின் தோல், கமலா ஆரஞ்சு பழத்தை விட தடிமனாகவும், உரிப்பதற்கு கடினமானதாகவும் இருக்கும்.
நாக்பூர் கமலா ஆரஞ்சு மற்றும் பஞ்சாப் கிண்ணு ஆரஞ்சு பழங்கள் சீசன், தற்போது களைகட்ட துவங்கியுள்ளன. இதன் எதிரொலியாக, கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.
மொத்த விற்பனையில், 1 கிலோ கமலா ஆரஞ்சு 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிண்ணு ஆரஞ்சு பழங்கள் 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு பழங்களின் விலை மலிவாக உள்ளதால், அவற்றின் விற்பனையும் களைகட்டி வருகிறது.
குப்பையில் சாமந்தி
கோயம்பேடு சந்தைக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் வருகின்றன. வரத்து அதிகரித்ததாலும், முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததாலும், சந்தையில் பூக்கள் விற்பனை குறைந்து, விலை சரிந்துள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர்களும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் நேற்று கிலோ பன்னீர் ரோஸ் - 20 ரூபாய்க்கும், சாக்லேட் ரோஸ் - 30 --- 40, சம்பங்கி - 40 ---- 50, சாமந்தி - 10 ---- 40, மல்லி - 900 ---- 1000, கனகாம்பரம் - 300 ---- 400, காட்டு மல்லி - 60 --- 70, ஜாதி - 400 --- 500 ரூபாய்க்கும் விற்பனையானது.
விற்பனை குறைந்து, விலை வீழ்ச்சியடைந்ததால், தேங்கிய சாமந்தி மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள், குப்பையில் கொட்டப்பட்டன.