/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி மர்ம மரணம் பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி மர்ம மரணம்
பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி மர்ம மரணம்
பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி மர்ம மரணம்
பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி மர்ம மரணம்
ADDED : ஜூன் 09, 2025 01:18 AM
வியாசர்பாடி:வியாசர்பாடி, எஸ்.எம்., நகர், 18வது பிளாக்கை சேர்ந்தவர் நிர்மலா தேவி, 61. திருமணமாகவில்லை. இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, வியாசர்பாடி போலீசாருக்கு, நேற்று பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து, நிர்மலாதேவியின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, நிர்மலாதேவி மர்மமான முறையில் இறந்து கிடப்பதும், உடல் அழுகிய நிலையில் இருப்பதும் தெரியவந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து, மூதாட்டியின் வீட்டில் நகைகள் ஏதும் திருடு போயுள்ளதா என, சோதனை நடத்தினர்.
மூதாட்டி வீட்டின் வாட்டர்ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா, யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.