Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/திறந்த நிலையில் பக்கவாட்டு கால்வாய் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

திறந்த நிலையில் பக்கவாட்டு கால்வாய் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

திறந்த நிலையில் பக்கவாட்டு கால்வாய் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

திறந்த நிலையில் பக்கவாட்டு கால்வாய் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : பிப் 06, 2024 12:47 AM


Google News
சின்ன போரூர் பூத்தப்பேடு சேதுராமன் தெருவில், திறந்த நிலையிலுள்ள பக்கவாட்டு கால்வாயில் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வளசரவாக்கம் ஆற்காடு சாலை மற்றும் பூத்தப்பேடு, மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக, 151வது வார்டில் உள்ள சேதுராமன் தெரு உள்ளது.

ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணியால் நெரிசல் நிலவி வருவதால், போரூர் மற்றும் கிண்டி செல்ல ஏராளமான வாகன ஓட்டிகள், சேதுராமன் தெரு மற்றும் குப்புசாமி நாயக்கர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், குறுகலான இச்சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நெரிசல் நிலவி வருகிறது. இதில், சேதுரமான் தெருவில், 151வது மாநகராட்சி வார்டு அலுவலகம் அமைந்துள்ளது.

குறுகலான சேதுராமன் சாலையில் ஊராட்சி காலத்தில் கட்டப்பட்ட பக்கவாட்டு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முறையாக துார் வாரப்படாமலும், மேல் மூடிகள் இன்றியும் உள்ளது.

இதனால், கார் மற்றும் வேன்களுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் வழிவிடும் போது, பக்கவாட்டு கால்வாயில் சக்கரம் சிக்கி, தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது.

எனவே, இச்சாலையில் உள்ள பக்கவாட்டு கால்வாயை முறையாக துார் வாரி, மேல் மூடி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us