/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பருவமழை முன்னெச்சரிக்கை பணி அடையாறில் ஊழியர்கள் நியமனம் பருவமழை முன்னெச்சரிக்கை பணி அடையாறில் ஊழியர்கள் நியமனம்
பருவமழை முன்னெச்சரிக்கை பணி அடையாறில் ஊழியர்கள் நியமனம்
பருவமழை முன்னெச்சரிக்கை பணி அடையாறில் ஊழியர்கள் நியமனம்
பருவமழை முன்னெச்சரிக்கை பணி அடையாறில் ஊழியர்கள் நியமனம்
ADDED : ஜூன் 15, 2025 08:24 PM
அடையாறு:அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இதில், கிண்டி, வேளச்சேரி, அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், பருவமழையின்போது வெள்ள பாதிப்பு இருக்கும்.
மீட்பு பணிக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் கூடுதலாக ஊழியர்கள் நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஜூன் 15 முதல் டிச., 12ம் தேதி வரை, 200 நாட்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊதியம் வழங்க, 52.74 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.