ADDED : ஜூன் 08, 2025 12:20 AM
சென்னை,கொளத்துார், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரனேஷ், 21. வானகரம் புறவழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், மாநகர பேருந்திற்காக காத்திருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், பிரனேஷ் கையில் வைத்திருந்த மொபைல் போனை பறித்து தப்பினர். வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.