அரசு விரைவு பஸ்சில் அமைச்சர் பயணம்
அரசு விரைவு பஸ்சில் அமைச்சர் பயணம்
அரசு விரைவு பஸ்சில் அமைச்சர் பயணம்
ADDED : மே 22, 2025 12:29 AM
சென்னை,சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பயணியர் கோரிக்கை ஏற்ப பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம், தன் வழக்கமான அலுவல் பணிகளை முடித்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு இரவில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வந்தார்.
பின், அங்கிருந்து அரசு விரைவு பேருந்தில் உளுந்துார்பேட்டை வரை பயணித்தார். பேருந்தில் இருந்த பயணியரிடம் குறைகள் எதுவும் இருக்கின்றனவா? என கேட்டறிந்தார். ஓட்டுனரின் பின் இருக்கையில் அமர்ந்தவாறு பயணத்தை தொடர்ந்தார். ஓட்டுநர், நடத்துநரிடமும் கருத்துக்களை பெற்றுக் கொண்டார்.
தன் பயணம் குறித்த வீடியோவை அமைச்சர் சிவசங்கர், சமூக வலைதள பக்கத்தில் நேற்று பகிர்ந்தார்.