Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைப்பு

கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைப்பு

கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைப்பு

கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைப்பு

ADDED : மே 22, 2025 12:30 AM


Google News
மேவளூர்குப்பம் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தல் மற்றும் கோவில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ள, வருவாய் துறையின் வாயிலாக, 40 தனி தாசில்தார்கள், 172 உரிமம் பெற்ற நில அளவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, 1.89 கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, 36 ரோவர் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதுவரை, 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, 1,22,291 எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், மேவளூர்குப்பத்தில் உள்ள வள்ளீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 2,00,001வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியை, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் அன்பரசன் ஆகியோர், நேற்று துவங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us