/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இ.சி.ஆர்., ஆறு வழி சாலையாக விரிவாக்கம் பருவமழைக்குமுன் முடிக்க அமைச்சர் உத்தரவு இ.சி.ஆர்., ஆறு வழி சாலையாக விரிவாக்கம் பருவமழைக்குமுன் முடிக்க அமைச்சர் உத்தரவு
இ.சி.ஆர்., ஆறு வழி சாலையாக விரிவாக்கம் பருவமழைக்குமுன் முடிக்க அமைச்சர் உத்தரவு
இ.சி.ஆர்., ஆறு வழி சாலையாக விரிவாக்கம் பருவமழைக்குமுன் முடிக்க அமைச்சர் உத்தரவு
இ.சி.ஆர்., ஆறு வழி சாலையாக விரிவாக்கம் பருவமழைக்குமுன் முடிக்க அமைச்சர் உத்தரவு
ADDED : மே 23, 2025 12:25 AM

சென்னை, :இ.சி.ஆர்., சாலையை ஆறு வழி சாலையாக விரிவாக்கும் பணியை பருவ மழைக்கு முன் முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அதிகாரிகளுக்கு, அமைச்சர் வேலு உத்தரவிட்டார்.
இ.சி.ஆரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரிப்பதால், நான்கு வழி சாலையை, ஆறு வழி சாலையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, 952 கோடி ரூபாயில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரத்திற்கு விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.
மேலும், 2,100 கோடி ரூபாயில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, 16 கி.மீ., துாரத்தில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இரண்டு பணிகள் தொடர்பாக அமைச்சர் வேலு நேற்று, திருவான்மியூர் கொட்டிவாக்கம், நீலாங்கரை பகுதியில் ஆய்வு செய்தார்.
மேம்பாலம் அமைவதால், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் உள்ள தேர் செல்லும் பாதையில் இடையூறு ஏற்படும் சூழல் நிலவியது.
இந்த பகுதியை பார்வையிட்ட அமைச்சர், தேர் செல்ல இடையூறு இல்லாத வகையில், சாலை விரிவாக்கம் செய்யவும், மேம்பாலம் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆறு வழி சாலையாக மாற்றும் பகுதியில், 2 கி.மீ., தூரத்தில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிப்பதுடன், பருவ மழைக்கு முன், ஆறு வழி சாலையை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், பணிகளை வேகப்படுத்த ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தினார்.
விரிவாக்கத்திற்க்கான ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் நில கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் கூறினார்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலை துறை செயலர் செல்வராஜ், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
***