'மெட்ரோ'வுக்கு சுற்றுச்சூழல் விருது
'மெட்ரோ'வுக்கு சுற்றுச்சூழல் விருது
'மெட்ரோ'வுக்கு சுற்றுச்சூழல் விருது
ADDED : மே 28, 2025 12:17 AM
சென்னை, உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில், உலக எரிசக்தி தலைவர்கள் மாநாடு, புதுடில்லியில் நடந்தது. இந்த மாநாட்டில், 2025ம் ஆண்டிற்கான உலகளாவிய 'சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்' என்ற விருது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சூரிய மின்சக்தி பயன்பாடு, பசுமையான தோட்டங்களை வளர்த்து சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதலில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பாக செயல்பாட்டிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த விருதை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக்கிடம் காண்பித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா வாழ்த்து பெற்றார்.
அப்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் உடடனிருந்தார்.