Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேளச்சேரி - கடற்கரை மேம்பால ரயில் தடத்திற்கான புது திட்டம் தயாரித்து ஒப்புதலுக்காக மெட்ரோ காத்திருப்பு

வேளச்சேரி - கடற்கரை மேம்பால ரயில் தடத்திற்கான புது திட்டம் தயாரித்து ஒப்புதலுக்காக மெட்ரோ காத்திருப்பு

வேளச்சேரி - கடற்கரை மேம்பால ரயில் தடத்திற்கான புது திட்டம் தயாரித்து ஒப்புதலுக்காக மெட்ரோ காத்திருப்பு

வேளச்சேரி - கடற்கரை மேம்பால ரயில் தடத்திற்கான புது திட்டம் தயாரித்து ஒப்புதலுக்காக மெட்ரோ காத்திருப்பு

ADDED : மே 11, 2025 12:35 AM


Google News
சென்னை, சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை தற்போது, தினமும் 100 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரியையும் பரங்கிமலையையும் இணைக்கும் மேம்பால ரயில் திட்டப்பணிகள், இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தற்போது இந்த தடத்தில் உள்ள ரயில் நிலையத்தில், போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. மேலும், வணிக வளாகங்களுக்காக திட்டமிடப்பட்ட கட்டடங்களும், தற்போது வெறும் காட்சி பொருளாகவே இருக்கின்றன. ரயில்வே வாரியம் நிர்ணயிக்கும் வாடகை தொகைக்கு, வியாபாரிகளும் முன்வரவில்லை.

இதற்கிடையே, கடற்கரை - வேளச்சேரி மேம்பால தடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான புதிய திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

கடற்கரை - வேளச்சேரி மேம்பால தடம் மெட்ரோவுடன் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையடுத்து, மேம்பால ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை, மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான செலவு, நிதி, ரயில்கள் இயக்கம், நிலம், சொத்து மதிப்பு, வருவாய் பங்கீடு உள்ளிட்டவை குறித்து வாரியத்துக்கான ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.

மேலும், புதிய திட்ட அறிக்கையும் அனுப்பி உள்ளோம். அதில், ரயில் நிலையங்கள் மேம்பாடு, புதிய வகை ரயில்கள் இயக்கம், புதிய இணைப்பு சாலைகள் உருவாக்குதல், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் வசதி மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் வணிக வளாகத்துடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற உள்ளன. ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக, பல மாதங்களாக காத்திருக்கிறோம். உரிய ஒப்புதலை அளித்தவுடன், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us