/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அங்கன்வாடி மையத்தில் மருத்துவ முகாம் அங்கன்வாடி மையத்தில் மருத்துவ முகாம்
அங்கன்வாடி மையத்தில் மருத்துவ முகாம்
அங்கன்வாடி மையத்தில் மருத்துவ முகாம்
அங்கன்வாடி மையத்தில் மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 17, 2025 12:50 AM
சென்னை, தேனாம்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று, வயிற்றுப்போக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
அதில், முறையாக கைகழுவுவதன் அவசியம், கைகழுவும் முறை மற்றும் ஓ.ஆர்.எஸ்., உப்பு - சர்க்கரை கரைசல் தயாரிப்பது, பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கான, இரண்டு ஓ.ஆர்.எஸ்., கரைசல் பாக்கெட்டுகள், 14 துத்தநாக மாத்திரைகள், விழிப்புணர்வு கையேடுகள், பெற்றோரிடம் வழங்கப்பட்டன.