/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பீஹார் வாலிபரை கட்டி வைத்து தாக்கிய இறைச்சி கடை ஊழியர்கள் கைது பீஹார் வாலிபரை கட்டி வைத்து தாக்கிய இறைச்சி கடை ஊழியர்கள் கைது
பீஹார் வாலிபரை கட்டி வைத்து தாக்கிய இறைச்சி கடை ஊழியர்கள் கைது
பீஹார் வாலிபரை கட்டி வைத்து தாக்கிய இறைச்சி கடை ஊழியர்கள் கைது
பீஹார் வாலிபரை கட்டி வைத்து தாக்கிய இறைச்சி கடை ஊழியர்கள் கைது
ADDED : செப் 15, 2025 10:57 PM
சென்னை;மது அருந்தும்போது ஒருமையில் பேசிய ஆத்திரத்தில், பீஹார் வாலிபரை அறையில் கட்டி வைத்து இரும்பு பைப்பால் தாக்கிய இறைச்சி கடை ஊழியர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கோடம்பாக்கத்தில் இறைச்சி கடை நடத்தி வருபவர் அப்சல், 43. இவரது கடையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, முகமது டெடர், 22, பைஜன், 19, சவுரவ், அஷ்ரப், ஜாவித் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களை, கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கடையில் பணிபுரியும் ஜாவித் என்பவர் உரிமையாளர் அப்சலிடம், 'நம் கடையில் பணிபுரியும் சவுரவ் மற்றும் சிலர், அறையில் ஒருவரை கட்டி வைத்து தாக்கி, அதை வீடியோ எடுத்து 'பேஸ்புக்'கில் வெளியிட்டுள்ளதாக கூறினார்.
அதிர்ச்சியடைந்த அப்சல், சம்பவ இடத்திற்கு சென்று கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருந்த மற்றொரு இறைச்சி கடை ஊழியரான பீஹார் மாநிலத்தை சேர்ந்த முகமது ஜூவீத் என்பவரை மீட்டார். அதுமட்டுமல்லாமல், அவரை கட்டி வைத்து தாக்கியோரில், இருவரை பிடித்து வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசாரின் விசாரணையில், கடந்த பக்ரீத் பண்டிகையின்போது இவர்கள் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, முகமது ஜூவீத் போதை தலைக்கேறி சவுரவை தரக்குறைவாக ஒருமையில் பேசியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஆத்திரமடைந்த சவுரவ், பேச வேண்டும் என முகமது ஜூவீத்தை அறைக்கு வரவழைத்து, நண்பர்களுடன் சேர்ந்து கட்டி வைத்து இரும்பு பைப்பால் தாக்கியது தெரியவந்தது.
இதுதொடர்பாக, முகமது டெடர், பைஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சவுரவ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.