/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண் பணியாளருக்கு அச்சுறுத்தல் இல்லை எம்.டி.சி., விளக்கம் பெண் பணியாளருக்கு அச்சுறுத்தல் இல்லை எம்.டி.சி., விளக்கம்
பெண் பணியாளருக்கு அச்சுறுத்தல் இல்லை எம்.டி.சி., விளக்கம்
பெண் பணியாளருக்கு அச்சுறுத்தல் இல்லை எம்.டி.சி., விளக்கம்
பெண் பணியாளருக்கு அச்சுறுத்தல் இல்லை எம்.டி.சி., விளக்கம்
ADDED : ஜூன் 05, 2025 11:37 PM
சென்னை :சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், மேலும் வெளியிட்டுள்ள விளக்கம்:
மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 154 பேர் உட்பட, மொத்தம் 362 பெண்கள் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு, உயர் அதிகாரிகளால் அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஒரு பெண்ணிற்கு வருகை பதிவு வழங்காமல் பணியிட மாற்றம் செய்ததாகவும், பொது வெளியில் புகார் பரவியது.
சம்பந்தப்பட்ட பெண், ஒரே பிரிவில் நீண்ட காலமாக பணியாற்றியதாலும், அவரது பணியில் ஏராளமான குறைபாடு இருந்ததாலும் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தவிர, நடத்தை விதிகளுக்கு புறம்பாக புதிய இடத்தில் சேர மறுத்து, பணிக்கு செல்லாததால், அவருக்கு வருகைப்பதிவு வழங்கப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.