/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழைநீர் தேங்கி பாதிப்பு இல்லை என்கிறார் மேயர் மழைநீர் தேங்கி பாதிப்பு இல்லை என்கிறார் மேயர்
மழைநீர் தேங்கி பாதிப்பு இல்லை என்கிறார் மேயர்
மழைநீர் தேங்கி பாதிப்பு இல்லை என்கிறார் மேயர்
மழைநீர் தேங்கி பாதிப்பு இல்லை என்கிறார் மேயர்
ADDED : டிச 02, 2025 04:04 AM
சென்னை: 'டிட்வா' புயல் மழையால் சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை, மாநகராட்சி மேயர் பிரியா பார்வையிட்டார். அதேபோல், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள எல்.இ.டி., கண்காணிப்பு திரையில், சென்னையின் மழை பாதிப்புகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு செய்தார்.
மேயர் பிரியா கூறியதாவது:
ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட முக்கிய கால்வாய்களை துார்வாரி சுத்தப்படுத்தி உள்ள தால், மழைநீர் தடையின்றி செல்கிறது. சென்னையில் எந்த பகுதியிலும் தண்ணீர் இடுப்பளவு தேங்கி பாதிப்பு ஏற்படவில்லை.
சென்னையில் 10 - 15 செ.மீ., மழை பெய்தாலும், மழைநீர் தேங்கும் 600க்கும் மேற் பட்ட இடங்களில் நீரை வெளியேற்ற, 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 103 படகுக ளும் உள்ளன.
பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், 150 இணைப்புகளுடன் 1913 என்ற உதவி எண் செயல்பட்டு வருகிறது. மழைநீர் அகற்றும் பணியில், 22,00 0 பணியா ளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.


