/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கார்நேசன் நகரில் குடியிருப்புகளுக்கு பணம் கட்டியும் அலைக்கழிப்பு மார்க்.கம்யூ., கவுன்சிலர் குற்றச்சாட்டு கார்நேசன் நகரில் குடியிருப்புகளுக்கு பணம் கட்டியும் அலைக்கழிப்பு மார்க்.கம்யூ., கவுன்சிலர் குற்றச்சாட்டு
கார்நேசன் நகரில் குடியிருப்புகளுக்கு பணம் கட்டியும் அலைக்கழிப்பு மார்க்.கம்யூ., கவுன்சிலர் குற்றச்சாட்டு
கார்நேசன் நகரில் குடியிருப்புகளுக்கு பணம் கட்டியும் அலைக்கழிப்பு மார்க்.கம்யூ., கவுன்சிலர் குற்றச்சாட்டு
கார்நேசன் நகரில் குடியிருப்புகளுக்கு பணம் கட்டியும் அலைக்கழிப்பு மார்க்.கம்யூ., கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 15, 2025 08:28 PM
தண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் நடந்தது. இதில், மண்டல அதிகாரி திருநாவுக்கரசு, தி.மு.க., - காங்., - ம.தி.மு.க., - வி.சி.க., கட்சி கவுன்சிலர்கள், சுகாதாரத்துறை, குடிநீர் வாரிய, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், கவுன்சிலர்கள் கூட்டத்தில் முறையிட்டனர்.
ஆனந்தி, 46வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:
வியாசர்பாடி, 'சி' கல்யாணபுரம் தெரு, ஜெ.ஜெ.நகர், சத்தியமூர்த்தி நகர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட இடங்களில், தெரு விளக்குகள் இல்லை. விரைந்து அமைத்து தர வேண்டும்.
தற்போது பெய்து வரும் மழையால், சாலையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, போதிய சாலை பணியாளர்கள் இல்லை. எனவே, சாலை பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
விமலா 41வது வார்டு மார்க்.கம்யூ., கவுன்சிலர்:
தண்டையார்பேட்டை, சஞ்சய் காந்தி நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். சஞ்சய் காந்தி நகரின் பின்புறம் உப்பு கால்வாய் பாதை உள்ளது.
இங்கு மர்ம நபர்கள் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், பெண்கள் அச்சத்துடனும், பயத்துடனும் செல்ல வேண்டி உள்ளது. எனவே, இப்பகுதியில் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.
தண்டையார்பேட்டை, கார்நேசன் நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 240 குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்குள்ள 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு பணம் கட்டியும், தடையில்லா சான்று வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். எனவே தடையில்லா சான்றிதழை, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கூட்டத்தில், 38வது வார்டில் கருணாநிதி நகர் 3வது தெருவில் 1.87 கோடி ரூபாயில் சமூக நலக்கூடம் கட்டுவது; புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகரில், 80 லட்ச ரூபாயில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய கட்டடம், முல்லை நகர், மயான பூமியில், 10 லட்ச ரூபாய், எரிவாயு தகன மேடை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் உட்பட, 26.69 கோடி ரூபாய் செலவில், 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.