/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ஆன்லைன் டிரேடிங்' ஆசையில் ரூ.10 லட்சம் இழந்தவர் புகார் 'ஆன்லைன் டிரேடிங்' ஆசையில் ரூ.10 லட்சம் இழந்தவர் புகார்
'ஆன்லைன் டிரேடிங்' ஆசையில் ரூ.10 லட்சம் இழந்தவர் புகார்
'ஆன்லைன் டிரேடிங்' ஆசையில் ரூ.10 லட்சம் இழந்தவர் புகார்
'ஆன்லைன் டிரேடிங்' ஆசையில் ரூ.10 லட்சம் இழந்தவர் புகார்
ADDED : மே 31, 2025 02:02 AM
கொடுங்கையூர்:கொடுங்கையூர், காமராஜர் சாலையைச் சேர்ந்த விஜயபாஸ்கர், 27; கார் மெக்கானிக். இவரது நண்பரான டில்லியைச் சேர்ந்த மன்மோகன்சிங் ராவத் என்பவர், ஜனவரி மாதம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'ஆன்லைன் டிரேடிங்'கில் பணம் முதலீடு செய்தால், 20 முதல் 25 சதவீதம் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய விஜயபாஸ்கர், முதலீடு செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜன., 20ம் தேதி விஜயபாஸ்கர் வீட்டிற்கு வந்த மன்மோகன் சிங் ராவத், 10 லட்ச ரூபாய் வாங்கி கொண்டு சென்றார். ஆனால், விஜயபாஸ்கரை லாபமும் கிடைக்கவில்லை; முதலீடு செய்த பணமும் தராமல், மன்மோகன் சிங் ராவத் ஏமாற்றினார்.
மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்ட விஜயபாஸ்கரிடம், 'பணம் தர முடியாது; உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்' என, மன்மோகன் சிங் ராவத் மிரட்டியுள்ளார்.
இது குறித்த புகாரையடுத்து, கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.