/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி தற்கொலைக்கு துாண்டியவர் கைது பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி தற்கொலைக்கு துாண்டியவர் கைது
பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி தற்கொலைக்கு துாண்டியவர் கைது
பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி தற்கொலைக்கு துாண்டியவர் கைது
பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி தற்கொலைக்கு துாண்டியவர் கைது
ADDED : ஜூன் 15, 2025 12:14 AM

பம்மல், பம்மலை அடுத்த பொழிச்சலுார், வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் பூஜா, 25. ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 3ம் தேதி இரவு, மொபைல் போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை, அவர் அறையின் கதவை தட்டிய போது, திறக்கவில்லை.
சந்தேகமடைந்து, கதவை உடைத்து பார்த்த போது, மின்விசிறியில் துாக்கிட்டு பூஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் கூறியதாவது:
பொழிச்சலுார், மல்லிமா நகரை சேர்ந்தவர் விக்னேஷ் குமார் என்கிற விக்கி, 25. பல்லாவரத்தில் உள்ள தனியார் வங்கி ஊழியர். அவர், பூஜாவையும், அவரது தோழியையும் காதலித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பூஜாவை பல இடங்களுக்கு அழைத்து சென்று, போட்டா எடுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன், பூஜாவின் தோழியை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பூஜாவிடம் கூறியுள்ளார். இதனால், கடந்த 3ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு, 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, தொடர்ச்சியாக பூஜாவிற்கு போன் செய்துள்ளார். பூஜாவிற்கு மன உளைச்சல் ஏற்படுத்தி, தற்கொலை செய்துகொள்ள துாண்டுதலாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, விக்கி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.