ரூ.3 கோடி சொத்து அபகரித்தவர் கைது
ரூ.3 கோடி சொத்து அபகரித்தவர் கைது
ரூ.3 கோடி சொத்து அபகரித்தவர் கைது
ADDED : ஜூன் 27, 2025 12:50 AM

சென்னை,செங்குன்றத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 41; ஜோசியர். இவருக்கு, திருவள்ளூர் மாவட்டம், விஜயநல்லுாரில் 5,114 சதுரடி சொத்து உள்ளது.
இதை சிலர் அபகரித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், ராயப்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோர், போலி ஆவணம் தயாரித்தும் ஆள்மாறாட்டம் செய்தும், 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்தது தெரியவந்தது.
வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன் என்பவரை, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்; பாலசுப்பிரமணியன் தலைமறைவானார்.
கடந்த 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பாலசுப்பிரமணியன், 64, நேற்று திருவல்லிக்கேணியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
ஏற்கனவே கைது செய்யப்பட்ட கிருஷ்ணன், சிவகுமாரின் தம்பிக்கு சொந்தமான சொத்தை, உரிய பணம் கொடுத்து வாங்கி உள்ளார். கூடுதல் இடம் தேவைப்பட்டதால், சிவகுமாரின் சொத்தை வாங்க அணுகி உள்ளார்.
அப்போது சிவகுமார், சொத்தை விற்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி கிருஷ்ணனை, திருப்பி அனுப்பி உள்ளார்.
அதன்பின் தான் கிருஷ்ணன் போலி ஆவணம் தயாரித்தும் ஆள்மாறாட்டம் செய்தும், பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து சொத்தை அபகரித்து உள்ளனர்.