/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது
மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது
மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது
மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது
ADDED : ஜூன் 09, 2025 02:18 AM
ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலாஜி, 21. நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த விஜய், 31, என்பவர், பாலாஜியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.
பணம் தர மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டி, பாலாஜியின் சட்டை பாக்கெட்டில் இருந்து, 1,000 ரூபாயை பறித்துவிட்டு தப்பினார்.
இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த ஆதம்பாக்கம் போலீசார், நேற்று விஜய்யை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.