/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : மே 23, 2025 11:56 PM

சென்னை :தி.நகர், டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் திரிஷா, 23. அவரது கணவர், ஒன்பது மாதங்களுக்கு முன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால், பாண்டிபஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார்.
கடந்த, 21ம் தேதி அன்று இரவு வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்போது, அவரது கணவரின் உறவினர் கோபி என்பவர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த திரிஷா, ஏன் தகராறு செய்கிறீர்கள் என, தட்டிக் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த கோபி, ஆபாசமாக பேசி கீழே தள்ளியதுடன், செங்கல்லை எடுத்துக்காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கொலை மிரட்டல் விடுத்த கோபி, 21 என்பவரை நேற்று கைது செய்தனர். கைதான கோபி மீது, ஏற்கனவே, இரண்டு அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
**