/உள்ளூர் செய்திகள்/சென்னை/தங்க இடமளித்தவரிடம் 'ஆட்டை' போட்டவர் கைதுதங்க இடமளித்தவரிடம் 'ஆட்டை' போட்டவர் கைது
தங்க இடமளித்தவரிடம் 'ஆட்டை' போட்டவர் கைது
தங்க இடமளித்தவரிடம் 'ஆட்டை' போட்டவர் கைது
தங்க இடமளித்தவரிடம் 'ஆட்டை' போட்டவர் கைது
ADDED : ஜூன் 15, 2025 08:23 PM
கே.கே.நகர்:திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நுாரில் அமீன், 39. இவர், வெளிநாட்டு விசாவை புதுப்பிப்பதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்தார்.
கே.கே.நகரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கினார். அப்போது, இரவு உணவு சாப்பிட்டு விட்டு நடந்து சென்றபோது, நஞ்சுண்ட கவுடா என்பவர், அவரிடம் தன்னை அறிமுகம் செய்தார்.
தன் உடைமைகளை தொலைந்து விட்டதாகவும், தங்க இடம் வேண்டும் எனவும், உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, நுாரில் அமீன் தன் அறையில், அவரை தங்க வைத்துள்ளார்.
பின், இரவு நுாரில் அமீன் எழுந்து பார்த்தபோது, மொபைல் போன், 500 ரூபாய், 5,000 ரூபாய் மதிப்பிலான சவுதி ரியால் நோட்டுகளை, நஞ்சுண்ட கவுடா திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நஞ்சுண்ட கவுடா, 25, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.